​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக New

​உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக

உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக

புகழுகின்றோம் போற்றுகின்றோம்

பாடுகின்றோம் இறைவனே

வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்

வழிபடுகின்றோம் தெய்வமே

ஆராதனை ஆராதனை ஆராதனை புரிந்து

மகிமைப்படுத்துகின்றோம் யாம்
1. உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்

ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே

ஆற்றல்மிகு வல்லவரே தந்தையே இறைவனே

ஆண்டவரே இறைமகனே இயேசு கிறிஸ்துவே தெய்வமே

செம்மறியே செம்மறியே செம்மறியே – இறைத்

தந்தையினின்று ஜெனித்தவர் நீர்
2. உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்

உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையிடம் வலப்புறத்தில் வீற்றிருக்கும் மீட்பரே

இரங்குமய்யா எம்மீது இயேசு கிறிஸ்து தெய்வமே

தூயவர் தூயவர் தூயவர் அய்யா

நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்

மாட்சியில் உள்ளவர் நீரே – ஆமென் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top