மகிமை தேவ மகிமை

மகிமை தேவ மகிமை

வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்

மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது

தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும்
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள்

பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள்

ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும்
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள்

சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் தேசமாவான்
கர்த்தர் தாமே அவர் காலத்தில்
துரிதமாய் செய்திடுவார்

கடற்கரையின் திரள் கூட்டம்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கத்தோலிக்க சபையெங்கும்
அபிஷேக நதி பாயும்

அரபு தேசமெங்கும்
அபிஷேக மழை இறங்கும்
இஸ்லாமியர் பெருங்குகூட்டமாய்
இரட்சகரை அறிந்து கொள்வார்கள்

பாரதம் மீட்படையும்
துதியால் நிரம்பிவிடும்
நாசம் அழிவு கொடுமை எல்லாம்
தேசத்தில் இருப்பதில்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top