இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே – 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2 மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாள் – 2 கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை – 2 வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் – 2

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா Read More »

இறை இரக்கத்தின் ஜெபமாலை

1. தொடக்க ஜெபம்: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென் இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே!

இறை இரக்கத்தின் ஜெபமாலை Read More »

மூவேளைச் செபம்

மூவேளைச் செபம்: ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார் அவளும் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்தார் – அருள் நிறை இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் – அருள் நிறை வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் – அருள் நிறை இயேசுகிறிஸ்துநாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக – இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபிப்போமாக இறைவா ! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும்,

மூவேளைச் செபம் Read More »

செபமாலை

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென். இறைவா எங்களுக்குத் துணையாக வந்தருளும் ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய விரைந்தருளும். பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக -ஆமென். அளவில்லாத சகல நன்மையும், சுரூயஅp;பியுமாய் இருக்கிற எங்கள் சர்வேசுராசாமி நீச மனுசருமாய் நன்றியறியாத பாவிகளுமாய் இருக்கிற, அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத

செபமாலை Read More »

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக செனித்த இறைவன்

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக Read More »

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை அறிய இயலாக் குறைகள் நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும் மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக இருவரிடமாய் வருகின்றவராம் புனித ஆவியானவர்க்கும் அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக -ஆமென்.

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை Read More »

அருட்திரு தேவ தேவன் போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி அவர் தம் திரு நாமம் போற்றி 1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி அவர் தம் திரு அன்பே போற்றி 2. அருட்திரு தூய ஆவி போற்றி அவர் தம் திரு ஞானம் போற்றி 3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி அவர் தம் திரு தூய்மை போற்றி 4. அருட்திரு சூசை முனியும் போற்றி அவர் தம் திரு வாய்மை போற்றி 5. அருட்திரு தூதர் அமரர் போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி Read More »

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2) 1. பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின் தாயாரே பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2) இப்போதும் நீர் மன்றாடும் எப்போதும் நீர் மன்றாடும் (2) தீமைகள் நெருங்குகையிலே எம்மைத் தாங்குமம்மா 2. அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே மகனும் வாழியவே – 3

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே Read More »

மாதாவே துணை நீரே உம்மை

மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரம் தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன்பாக எமைப்பாரும் (2) 1. வானோர் தம்அரசே தாயே எம் மன்றாட்டை தயவாய்க் கேளும் ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும் 2. ஒன்றே கேட்டிடுவோம் தாயேயாம் ஓர் சாவான பாவந்தானும் என்றேனும் செய்திடாமல் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்

மாதாவே துணை நீரே உம்மை Read More »

Scroll to Top