Ave Maria

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2) 1. பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின் தாயாரே பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2) இப்போதும் நீர் மன்றாடும் எப்போதும் நீர் மன்றாடும் (2) தீமைகள் நெருங்குகையிலே எம்மைத் தாங்குமம்மா 2. அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே மகனும் வாழியவே – 3

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே Read More »

சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே

சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா (2) 1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் – 2 கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம் 2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் – 2 இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா

சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே Read More »

என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே

என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே என் மீட்பராம் கடவுளையே நினைந்து மகிழ்கின்றதே தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை கடைக்கண் நோக்கி உயர்த்திவிட்டார் தலைமுறை யாவும் இனியென்னை பேறுடையாள் எனப் போற்ற வைத்தார் 1. வல்லமை மிக்கவர் என்றுமே நல்லவர் அரும் பெரும் செயல் புரிந்தார் அவருக்கு அஞ்சும் எளியவர் நெஞ்சம் இரக்கத்தை ஊட்டுகிறார் இதயத்தில் செருக்குற்ற கல்மனத்தோரை விரட்டியே அழித்திடுவார் அரியணை மீது அமர்ந்திடுவோரை அகற்றிடச் செய்திடுவார் (2) 2. தாழ்நிலை நின்றவர் உயர்வினை அடைவர் பசித்தோர்

என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றிடுதே Read More »

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன் தாய்மையின் நினைவாலே அம்மா 1. தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2 ஈன்ற தாயும் போற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன் அம்மா 2. வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2 உண்மை மனதும் உயர்ந்த நெறியும் நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா Read More »

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே..

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே அம்மா-உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல் உன் திருக்கொடி தான் வானில் எழில்ச்சி கண்டிடவே பறக்குதம்மா திசை எல்லாம் மக்களை வருக வருக என அழைக்குதம்மா… ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா -2 கோலவிழாவின் சிறப்பினைக் கூறி அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா (ஞாலத்தைப்) தன்னையே உலகிற்குத் தந்திட்ட தேவனின் தாயே உந்தன் நிழல் தேடி -2 அன்னையே ஆரோக்கிய மாதாவே உம்மை அண்டியே வந்தவர்கள்

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே.. Read More »

ஞானம் நிறை கன்னிகையே…

ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் ஏழு தூண்களுமாய் – 2 பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 1. பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உன்னையே பரமன் பாவ நிழலே அணுகா தாய் உதரம் நீ தரித்திடவே – 2 தனதோர் அமலன் தலமெனக் கொண்டார் – 2 2. வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே வாழ்வோர் அனைவரின் தாயே மக்கள் இஸ்ராயேல் தாரகையே – 2 வானோர் துதிக்கும் இறைவியே வாழி –

ஞானம் நிறை கன்னிகையே… Read More »

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா …

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா – 2 1. முடமான மகனை நடமாட வைத்தாய் கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய் – 2 பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய் பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் – 2 2. கடல் நீரும் கூட உன் கோயில் காண அலையாக வந்தே உன் பாதம் சேரும் – 2 உலகாளும் தாயே உனைப் பாடும்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா … Read More »

Scroll to Top